×

விசுவக்குடி, அரசலூர், அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு

பெரம்பலூர், ஜன. 7: விசுவக்குடி, அரசலூர், அன்னமங்கலம் பகுதியி–்ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பேரவையினர் மனு அளித்தனர். பெராம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு பேரவையினர் தலைவர் மார்சல் ராயன் தலைமையில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் சின்னப்பராஜ், பாஸ்கர், வேலு, குமார், மெல்வின் ராஜ், செபஸ்தியார் உள்ளிட்டோர் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதியில் வருகிற மார்ச் மாதம் 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

அதேபோல் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் கிராம ஜல்லிக்கட்டு பேரவையினர் பேரவை தலைவர் நரி என்கிற அர்ச்சுணன் தலைமையில் காளைகளை வளர்க்கும் மணி, அசோக் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில் பிப்ரவரி 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். மேலும் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராம ஜல்லிக்கட்டு பேரவையினர் பேரவை தலைவர் அபுசேட் தலைமையில் காளைகளை வளர்க்கும் சதாம் உசேன், அபுதாஹீர், ராஜாமுகமது, ஹலீல் ரகுமான் உள்ளிட்ட பலரும் பிப்ரவரி 16ம் தேதி தங்களது பகுதியில் ஜல்லிக்கட் டு நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

Tags : court ,Rajalur ,Annamangalam ,Visuvakkudi ,
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...